பல காலம் சினிமா துறையில் இருக்கிறேன் எனக்கு எல்லாம் தெரியும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு கண்டதை பேசுபவர் தான் பயிவான் ரங்கநாதன். இவரின் எரிச்சலூட்டும் பேச்சுக்கு பலர் அமைதியாக இருந்தாலும் சிலர் தக்க பதிலடி கொடுக்கின்றனர். இதற்கிடையே விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் என்று தொடர்ந்து பேசப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், லட்சுமி மேனன் நடிகை என்பதை தாண்டி ஒரு பெண். அவரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுமாதிரியான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் லட்சுமி மேனன் மற்றும் விஷால் பற்றி வழக்கம் போல் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டார் என கூறியிருந்தார். இந்நிலையில், விஷால் கொடுத்த பேட்டி ஒன்றில் “வருகிற போகியில் பழைய பொருள்களுடன் சேர்த்து பயில்வானை கொளுத்த வேண்டும் என்பது என் ஆசை. நாம் யாரை பற்றி பேசலாம் ஆனால் அதற்கும் எல்லை இருக்கிறது. அவருக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் தானே” என கூறியுள்ளார்.