நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்தித்து பேசும்போது மீண்டும் கை நடுக்கத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படத்தின் ஃப்ரீ ரீலிசின் போது கை நடுக்கத்துடன் விஷால் பேசியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “ஐயோ விஷாலுக்கு என்ன ஆச்சு..?” என்பதுதான் அன்று முழுக்க பேச்சாக இருந்தது. ஆனால், அடுத்த வாரமே மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸின் போது கெத்தாக விஷால் பழைய நிலையில் வந்தார்.
இந்நிலையில், மதகஜராஜா திரைப்படத்திற்கு பிறகு பல கோவில்களில் விஷால் தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், பட்ஜெட் பற்றியும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் சென்ற காரை சிலர் துரத்தி வந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து நான் என்ன சொல்ல வேண்டும் என்றாலும் அதை கைநடுக்கத்துடன் சொல்ல வேண்டும்.
அப்படி சொன்னால் தான் மக்கள் மத்தியில் விரைவாக செல்கிறது. 4 நிமிட வீடியோவால் உலகத்தில் எங்கெல்லாம் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு பத்திரிகையாளர்கள் காட்டிவிட்டார்கள். அனைவருக்குமே நன்றி என்று விஷால் தெரிவித்தார். அதோடு விஷாலின் உடல்நிலை குறித்து சிலர் அவதூறு கருத்துக்கள் பரப்பியதற்காக சில யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர உள்ளதாக நடிகர் நாசர் தெரித்திருந்தார்.
அதுபற்றி விஷால் கூறுகையில், ஆமாம், என்னைப் பற்றி மட்டுமல்லால் சில நடிகர், நடிகைகள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்கள். அதற்கு கடிவாளம் போட வேண்டும். நடிகர்கள் நடிக்கும் படங்கள் பற்றி உங்களுடைய கருத்துக்களை தாராளமாக பேசுங்கள். ஆனால், அவர்களின் குடும்ப விஷயங்கள், அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அவதூறு பரப்பாதீர்கள். அவதூறு பேசுபவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக சரியான தண்டனை கிடைக்கும்.
என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நபர் என்னென்னமோ பேசினார். அவர், 3 மாதத்தில் என் நிலைமை அவ்வளவு தான். இனி என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாது என்றெல்லாம் பேசினார். நான் இப்போது மீண்டும் வந்து விட்டேன். இதற்கு அவர் என்ன பதில் சொல்வார்” என்று விஷால் பேசியிருக்கிறார்.
Read More : ”2026இல் புதிய அரசியல் படைப்போம்”..!! ”பாஜகவின் ஏ டீம் திமுக தான்”..!! பரபரப்பை கிளப்பிய சீமான்..!!