fbpx

விலையில்லா மடிக்கணினியுடன் கூடிய தொழிற்பயிற்சி…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி சான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயதுவரம்பு ஏதும் இல்லை.

விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டுமே ஆகும். நேரடி சேர்க்கைக்கு வருகை புரியும் விண்ணப்பதார்கள் உரிய 8th / 10th அசல் மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2021 ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 9-ம் வகுப்பு அசல் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது பின் வரும் தமிழ்நாடு அரசின் சலுகைகள் பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, விலையில்லா பாட புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், 4 விலையில்லா காலணி – 1 ஜோடி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதி, மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளுர் தொழிற்நிறுவனங்களில் உதவித் தொகையுடன் கூடிய குறுகிய காலபயிற்சி வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழிற்நிறுவனங்களில் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுநராக பயில வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகைபுரிந்து அல்லது 04286-299597, 04286- 290297. 79041 11101, 94437 66349 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

வெறும் ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Aug 31 , 2023
நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு உதவித் தொகை திட்டங்களை வழங்கி வருகிறது. சாதாரண மக்கள் தங்களுடைய அவசர காலங்களில் மற்றும் வயதான காலங்களில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் வகையில், பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 18 முதல் 70 வயது வரை உள்ள மக்கள் பயன்பெறலாம். இதில் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு கணக்கு, போஸ்ட் ஆபீஸ் […]

You May Like