fbpx

பிரதமரின் 100-லது மனதின் குரல் நிகழ்ச்சி…! ஆளுநர் மாளிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு…!

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலமாக தமது கருத்துகளை நாட்டு மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் இன்று ஒலிபரப்பாக உள்ளதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்று அந்த உரையைக் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேநே்திர மோடி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் தேசத்துக்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து மிக விரிவாகப் பேசி வருகிறார். இதில் அதிகமுறை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

அது மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக அதிக அளவில் தமது கருத்துகளைப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது 100-வது அத்தியாயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசவுள்ள நிலையில், அதனைப் பெரிய அளவில் கொண்டாடி பிரபலப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் இணைந்து பல்வேறு துறை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் பிரதமரின் மனதின் குரல் உரையை நேரலையில் கேட்கவுள்ளனர்.

Vignesh

Next Post

சூடானில் இருந்து இந்தியா திரும்பிய 117 பயணிகளுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி...! தனிமைப்படுத்த உத்தரவு...!

Sun Apr 30 , 2023
மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் 117 பயணிகள் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாததால் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து […]

You May Like