fbpx

சற்றுமுன்: வெடித்து சிதறிய எரிமலை! மக்களை அப்புறப்படுத்திய அரசு!

தற்போது உலகெங்கிலும் எரிமலை வெடிக்கும் சம்பவங்களும் பூகம்பங்களும் அவ்வப்போது நடைபெற்று மக்களை அதிர்ச்சியும் அச்சமும் கொள்ள செய்து கொண்டிருக்கின்றன. தற்போது இது போன்றதொரு சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இந்தோனேஷிய நாடு இயற்கை வளங்களுக்கும் எரிமலைகளுக்கும் பேர் போன ஒரு நாடு. இந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய ஒரு எரிமலை தான் சற்று முன் வெடித்து சிதறி இருக்கிறது.

இந்தோனேஷிய நாட்டின் யோக்யகர்த்தா பகுதியில் அமைந்திருக்கும் மிராப்பி என்ற எரிமலை தான் சற்று முன் வெடித்து சிதறி உள்ளது. மூன்று கிலோ மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழம்பும் புகையும் தூக்கி வீசப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த எரிமலை வெடித்ததால் அதனை சுற்றி வாழும் மக்கள் அனைவரும் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் . இயற்கை அழகானது என்றாலும் ஆபத்தானது. அமைதியாக இருக்கும் எரிமலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அதை வெடித்து சிதறினால் அவற்றில் இருந்து வரும் குழம்புகளும் புகையும் மக்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இந்தோனேசியாவில் மட்டும் 142 எரிமலைகள் இருக்கின்றன. உலகிலேயே எரிமலைகளுக்கு அருகே அதிக மக்கள் வாழும் நாடும் இந்தோனேசியா தான். இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு மற்றும் பூகம்பத்தினால் தான் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

போதை ஒழிப்பு மையத்தில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்! தலை கீழாக கட்டி இரும்பு பைப்பில் அடித்து கொலை!

Sat Mar 11 , 2023
குஜராத் மாநிலத்தில் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அந்த மையத்தைச் சார்ந்த ஏழு பேர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொண்டு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த மையத்தில் குஜராத் மாநிலம் மெஹ்னாவைச் சார்ந்த கார்த்திக் சுதர் என்ற […]

You May Like