Annamalai: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில், மக்களவை தேர்தலில் பணிபுரிந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை, மக்களவை தேர்தலில் கடினமாக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு, ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை ஸ்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து, களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும், பூத் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.
Readmore: 14 வருடங்களுக்கு பிறகு வெளியான ரகசியம்! கார்த்தி – தமன்னா காதலை உடைத்த இயக்குநர்!