fbpx

Voter ID | என்னது நாடு முழுவதும் ஒரே வாக்காளர் அட்டையா..? மாநில அரசின் அனுமதியே தேவையில்லையாம்..!!

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசமைப்பில் திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே. சிங், லோக்சபா முன்னாள் பொதுச் செயலர் சுபாஷ் சி. காஷ்யப் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் ராஷ்டிரபதி பவனில் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார். இந்த குழு கடந்த சில மாதங்களாக பின் வரும் ஆய்வுகளை மேற்கொண்டது.

சட்டசபை முடிவுக்கு வரும் தேதிகள் :

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: ஜூன் 2024 4. ஹரியானா, மகாராஷ்டிரா: நவம்பர் 2024 5. ஜார்கண்ட்: டிசம்பர் 2024 6. : பிப்ரவரி 2025 7. பீகார்: நவம்பர் 2025 8. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026 9. புதுச்சேரி: ஜூன் 2026 10. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027 11.உத்திரப் பிரதேசம்: மே 2027 12. குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027 13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028 14. கர்நாடகா: மே 2028

இதனால் இந்த தேர்தல்களை சேர்த்து நடத்தலாமா என்ற ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த குழு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசமைப்பில் திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுளது. அதேபோல் நாடு முழுக்க ஒரே ஒரே வாக்காளர் அடையாள அட்டையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் மீதம் உள்ள காலத்திற்கு மட்டும், இடைக்கால தேர்தல் நடத்த குழு பரிந்துரை செய்துள்ளது. தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தாலும் மீதம் உள்ள காலத்திற்கு மட்டும், இடைக்கால தேர்தல் நடத்த குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 2029இல் லோக்சபா தேர்தலை மாநில தேர்தல்களோடு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடத்த பரிந்துரை செய்துள்ளனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 2029 முதல் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் .

2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும். அதாவது 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம். 2029 முதல், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்படும். இதனால், 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபரின் ஆட்சி 2029ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துவிடும்.

Read More : TN JOB | தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! ரூ.35,000 வரை சம்பளம்..!!

Chella

Next Post

Election 2024 | குஷ்பூ ரூ.10,000/- கொடுக்கலாம்.! மன்சூர் அலிகான் நக்கல் பேட்டி.!

Thu Mar 14 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன . சர்ச்சைக்குரிய தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற கட்சியை நிறுவி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். […]

You May Like