மக்களை பிளவுப்படுத்தி அரசியல் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.
திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க சார்பில் நாங்க ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியபோது எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள் என்று பா.ஜ.க.வின் Dubbing Voice-ஆக பேசியவர்தான் பழனிசாமி. இப்போ பா.ஜ.க-வோட கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்ல தனியாக போட்டி போடுகிற கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
நாட்டை படுகுழியில் தள்ளியுள்ள பிரதமர் மோடியை பற்றியோ, பா.ஜ.கவை பற்றியோ கண்டித்து பேச பழனிசாமிக்கு தெம்பு இருக்கா..? உங்க கள்ளக்கூட்டணி, கபட நாடகத்தில் கூட பா.ஜ.கவை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லையா பழனிசாமி..? பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்து சொல்ல வேண்டும். ஆட்சி இருக்கு, பதவி இருக்குனு பா.ஜ.க.வினர் என்ன வேணும்னாலும் ஆணவமாக பேசலாமா..? அதுவும் ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைகாரர்கள் என சொல்றதும்.., இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டுகிறார். தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம், வெறுப்பு, வன்மம்.
மக்களை பிளவுப்படுத்தி அரசியல் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றோம். பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க நீதிமன்றம் சென்றோம். தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட 2 வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டும் பாஜக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தமிழ்நாட்டை வெறுக்காத, மதிக்கும் ஒருவர்தான் பிரதமராக வரவேண்டும்.