32 ஆண்டுக்கு முன்பு தான் ஏற்ற சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியுள்ளார் பிரதமர் மோடி.
அதாவது 1992ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சனை உச்சத்தை அடைந்த காலம் தான் அது. அன்றைய தினம் பிரதமர் மோடி பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷியுடன் அயோத்திக்கு சென்றார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ஏக்தா யாத்திரையின் ஒருபகுதியாக இந்த விசிட் அமைந்திருந்தது.
அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு மூலம் பாஜகவுக்காக பிரதமர் மோடி பணியாற்றி வந்தார். அவர் எம்எல்ஏ பதவி கூட வகிக்காத காலம் அது. அந்த சமயத்தில் அயோத்தியில் கூடாரத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கங்களை எழுப்பினார். மேலும், ராமர் வழிபாட்டில் பங்கேற்று அங்கேயே கூடாரம் அமைத்து தங்கினார். இந்த வேளையில் தான் பிரதமர் மோடி சபதம் ஒன்றை ஏற்றார்.
அதாவது, ”இந்த விசிட்டுக்கு பின் நான் இனி அயோத்திக்கு ராமர் கோவில் கட்டிய பிறகு தான் வருவேன்” என கூறினார். அதன்பிறகு நீண்ட காலத்துக்கு பின் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய தினம் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக அயோத்தி ராமர் கோவிலில் பிரதான் பிரதிஷ்டை சடங்கு செய்ய உள்ளார்.