மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
வாக்னர் படைகள் மாஸ்கோவிலிருந்து 450 கி.மீ. தொலைவில் ஊள்ள லிபெட்ஸ்க் வழியாக ரஷ்ய தலைநகருக்கு முன்னேறி வருகின்றன. ரஷ்ய விமானப்படை வாக்னர் படையைத் தாக்கி, தலைநகர் மாஸ்கோவை சுற்றி தற்காப்பு எல்லைகளை அமைத்துள்ளன. ரோஸ்டோவில் உள்ள ராணுவ தலைமையகத்தை போரின்றிகைப்பற்றியதாக வாக்னர் படை தலைவர் பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதின் விமானம் மூலம் மாஸ்கோவிலிருந்து வெளியேறியதாக வாக்னர் கருதுகின்றனர். ஆனால் இந்த செய்தியை கிரெம்ளின் மறுத்துள்ளது. சமீபத்திய காலங்களில் ரஷ்ய அரசுக்கு எதிரான மிக பெரிய கிளர்ச்சி இது என இங்கிலாந்து ராணுவ ஊளவுத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். ரஷ்ய அரசுக்கு எதிராக வாகனர் படையினரின் கிளர்ச்சி, பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.