fbpx

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…..? தயாராக இருங்கள் வெளியான முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் விதமாக வாக்காளர்கள் விபரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை மாதம் 21ம் தேதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 21 வரையில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணி அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உரிய படிவங்களை நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் வழங்கலாம். அதன் பிறகு வாக்காளர் பட்டியல் 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக வாக்காளர்கள் www.voters.eci.gov.in மற்றும் voterportal.eci.gov.in ஒரு லிட்டர் இணையதளங்களை வாக்காளர்கள் அணுகலாம். அதோடு, உதவி கைபேசி செயலியை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து பள்ளிகளுக்கும்……! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!

Wed Jun 28 , 2023
தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமானது. தற்சமயம் இந்த திட்டம் சென்னையில் இருக்கின்ற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், […]

You May Like