fbpx

சப் – இன்ஸ்பெக்டர் ஆக வேண்டுமா..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (TNUSRB SUB-INSPECTOR – 2023) காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) உள்ளிட்ட 621 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 05.05.2023 அன்று வெளியானது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: 01.07.2023 அன்று O/C – 20-30, BC, MBC, BCM-20-32, SC/ST/SCA -20-35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://www.tnusrb.tn.gov.in

இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், 29.05.2023 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பிற்கு சேர தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

இப்பணி காலியிட தேர்வு தொடர்பான விவரங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்கள் வழியே 7811863916 மற்றும் 9499966026 தொடர்பு கொள்ளலாம்.

Chella

Next Post

அதிரடி...! முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுள் காப்பீட்டு...! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...!

Wed Jun 14 , 2023
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, கோட்டக் மகிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனமிடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷரத் கபூர், இந்தக் கூட்டாண்மை நமது முன்னாள் படைவீரர்களுக்கு தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதோடு, […]

You May Like