fbpx

கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா..? விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்..!! அதுவும் இந்த கிழமையில்..!!

கடினமாக உழைத்தால் மட்டுமே ஒரு மனிதரால் பணக்காரனாகி விட முடியாது. புத்திசாலித்தனத்தோடு உழைக்க வேண்டும். திறமையாக செயல்படும் போது தான் ஒரு மனிதனுக்கு செல்வம் சேரும். இது ஒரு பக்கம் இருக்க கடுமையாக உழைத்து திறமையாக செயல்பட்டு, பணத்தை ஈர்க்க முடியாதவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் ஒரு சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் தீரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரை நேரத்தில் அரச மரத்தடி பிள்ளையாரை 108 முறை வலம் வர வேண்டும். இப்படி பிள்ளையாரை சுற்றி வரும்போது ‘ஓம் லக்ஷ்மி கணபதயே நமோ நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இல்லையென்றால், ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று 16 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போட்டு, 108 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தடி விநாயகரை வலம் வந்தாலும் சரி, கோவிலில் இருக்கும் விநாயகரை வலம் வந்தாலும் சரி, 108 முறை சுற்றி அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரே ஒரு வெள்ளிக்கிழமையை செய்து விட்டு பல கோடி பணம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வாருங்கள். படிப்படியாக உங்கள் பண கஷ்டம் குறைவதை உணர்வீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவ்வளவோ தடைகள் வந்து முட்டுக்கட்டை போடும். அதை எல்லாம் உடைத்தெறிய கூடிய சக்தியும் இந்த வழிபாட்டிற்கு உண்டு.

Read More : ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

If you want to get rich quickly in life, you need to do some spiritual remedies.

Chella

Next Post

கோயிலுக்குள் நுழையும்போது இந்த தவறை பண்ணாதீங்க..!! கண்டிப்பா காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Oct 7 , 2024
The temple is considered a holy place for Hindus. Pujas are usually held throughout the day in the temple.

You May Like