fbpx

நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா..? உடனே இந்த திட்டத்தில் இணைந்திருங்கள்..!!

இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள் வரை மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் முதன்மையானது அஞ்சல் அலுவலகங்கள் தான். இதில், என்னென்ன சேமிப்பு திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதங்கள் கிடைக்கிறது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) :

இது ஒரு நீண்ட கால வரி சேமிப்புத் திட்டமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த திட்டமானது முதிர்ச்சியடையும். ரூ.250 முதல் ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை நீங்கள் பணம் செலுத்தி இந்த கணக்கை நீங்கள் செயல்முறையில் வைத்துக் கொள்ளலாம். கணக்கைச் செயலில் வைத்திருக்க ஆண்டிற்கு ரூ. 500 வைப்புத்தொகை தேவை. இதன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) :

பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்தான் இது. 18 வயதை அடைந்தவுடன் வட்டியுடன் சேமிப்புத் தொகையைப் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 8% ஆகும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS):

60 வயது நிரம்பியவர்கள் வழக்கமான வட்டி வருமானத்தைப் பெறக்கூடிய திட்டம் தான் இது. இத்திட்டத்தில் தங்களது வாழ்நாளில் ரூ.30 லட்சம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். இவர்களுக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாகும்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC):

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சேமிப்புத் திட்டத்தை ஆரம்பிக்கலாம். இதற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இத்திட்டத்தில் இணைந்தால் உங்களுக்கு 7.7 சதவீதம் வட்டி கிடைக்கும்.

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS):

மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற அஞ்சலக திட்டங்களில் ஒன்று தான் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்து வைக்கலாம். இதற்கு 7.4% வட்டி வழங்கப்படுவதால், உங்களது தொகைக்கு ஏற்றவாறு வட்டி பணத்தை நீங்கள் மாதந்தோறும் பெற்றுக் கொள்ள முடியும்.

கிசான் விகாஸ் பத்ரா (KVP):

கடந்த 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா. குறைந்த பட்சமாக ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என்ற விகிதத்தில் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம் ஆகும்.

அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கு (Time deposit account):

அஞ்சல் அலுவலக சேமிப்புத்திட்டங்களில் ஒன்று தான் ஆர்டி. 1, 2, 3 மற்றும் 5 ஆண்டு காலத்திற்கு இந்த சேமிப்பு திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். இது வங்கிகள் வழங்கும் நிலையான வைப்புத்தொகையைப் போன்று வட்டி விகிதங்களை வழங்குகிறது. 1 ஆண்டு வைப்பு – 6.9 சதவீதம், 2 ஆண்டு வைப்பு – 7.0 சதவீதம், 3 ஆண்டு வைப்பு – 7.0 சதவீதம், 5 ஆண்டு வைப்பு – 7.5 சதவீதம் என வட்டி விகிதங்களை வழங்குகிறது.

Chella

Next Post

பிரபல யூடியூபரை கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!!

Mon Aug 28 , 2023
தமிழ் சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக சீரியலில் நடித்து வருபவர்கள், தற்போது ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் காதல் திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில், சின்னத்திரையில் தற்போது வேறு வேறு சேனலை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஜனனி பிரதீப். அதேபோல் யூடியூப் மூலம் […]

You May Like