fbpx

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? அப்படினா இதை பண்ணுங்க..!! எச்சரிக்கும் காவல்துறை..!!

தற்போது பெருமளவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது குறித்த தகவலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆன்லைன் பாதுகாப்பு என்று வரும்போது, வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது மற்றும் வெவ்வேறு பாஸ்வேர்ட்களை வெவ்வேறு அக்கவுண்டுகளுக்கு பயன்படுத்துவது போன்றவை அடிப்படையாக நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். இதனை நினைவூட்டுவதற்காக டெல்லி போலீசார் தற்போது மக்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு அக்கவுண்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு அக்கவுண்டிற்கும் கஷ்டமான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது ஒரு சவாலான காரியம். இதற்கு பாஸ்வோர்ட் மேனேஜர் ஒரு எளிய தீர்வாக அமையும். இது போன்ற சேவைகளை பற்றி தெரியாதவர்களுக்கு LastPass அல்லது இதே போன்ற பிற ஆப்ஷன்கள், ஐபோன்களில் பில்ட்-இன்னாக இருக்கக்கூடிய பாஸ்வோர்ட் மேனேஜர் அல்லது கூகுளின் பாஸ்வேர்ட் மேனேஜர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற கருவிகளை நீங்கள் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு முறை நீங்கள் லாகின் செய்யும் பொழுது பாஸ்வேர்டை என்டர் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது. இதனால் நீங்கள் அனைத்து பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

‘வலுவான பாஸ்வேர்டு’ என்பது என்ன?

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் படி, வலுவான பாஸ்வேர்ட்களை உருவாக்குவதற்கு பாஸ்வேர்ட் மேனேஜர்கள் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. எனினும் பாஸ்வேர்டுகளை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹார்வேர்டு ‘Passphrases’ பயன்படுத்துவதற்கு பரிந்துரை செய்கிறது.

Passphrases என்பது பாஸ்வேர்டுகளை காட்டிலும் நீளமானதாகவும், மிகவும் கடினமானதாகவும் இருக்கும். இவை நினைவில் வைத்துக் கொள்வதற்கு எளிதாக இருந்தாலும், பிறர் கணிப்பதற்கு கடினமாக இருக்கும். பாஸ்வேர்டை உருவாக்குவதற்கு ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தையும் எடுத்துக்கொண்டு அதில் நிறுத்தற்குறிகளை சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு கிடைக்கக்கூடிய பாஸ்வேர்ட் இப்படி இருக்கும்: ‘DiJ:Tbptbs,cadtfs.’ இதனை மேலும் பாதுகாப்பானதாகவும் கடினமான ஒன்றாகவும் மாற்றுவதற்கு நீங்கள் இடையிடையே எண்களை நுழைக்கலாம். இது நிச்சயமாக ஒரு கடினமான பாஸ்வேர்ட், அதே நேரத்தில் நினைவில் வைத்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.

Chella

Next Post

அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! 6 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Wed Nov 15 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று […]

You May Like