சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 24.03.2025 வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. கடந்த முறை மாவட்ட ஆட்சியரகத்தில நடைபெற்ற திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் அடையாள அட்டை ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்திடுமாறு திருநங்கைகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
எனவே சேலம் மாவட்டத்தில் இன்று அன்று ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 20.03.2025 அன்று எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 21.03.2025 அன்று சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 22.03.2025 அன்று கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 24.03.2025 அன்று ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அடையாள அட்டை ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள திருநங்கையர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.