2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம். அதை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். ஆகவே, நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதன் செயல்முறை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரேஷன் அட்டை பெறுவது எப்படி..?
* உங்களிடம் ரேஷன் அட்டை இல்லை என்றால், அதனை உருவாக்க முதலாவதாக மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
* இதையடுத்து, நீங்கள் ரேஷன் அட்டை விண்ணப்பத்துக்கான இணைப்பை பெறுவீர்கள். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
* பின்னர், விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
* இவற்றில் உங்களது பெயர், ஆதார் எண், இருப்பிடம் ஆகிய முக்கியமான தகவல்களை உள்ளிட வேண்டும்.
* படிவம் நிரப்பப்பட்டவுடன் நீங்கள் கோரிய ஆவணங்களை இங்கே பதிவேற்றவும்.
* இவற்றில் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, முகவரி சான்று, புகைப்படம் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தற்போது கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், ஒரு ஸ்லிப்பை நீங்கள் பெறுவீர்கள். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து ரேஷன் அட்டை வரும் வரை வைத்திருக்கவும்.
* இப்போது அனைத்து விவரங்களும் வெரிபிகேஷன் செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும்.