fbpx

கரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த லிக்விட்டை யூஸ் பண்ணி பாருங்க!

நாம் எவ்வளவுதான் கிச்சனை சுத்தமாக வைத்திருந்தாலும், கரப்பான் பூச்சிகளிடம் இருந்து தப்பிப்பது கடினமாகிவிடுகிறது.

கரப்பான் பூச்சிகளை எந்த செயற்கையான பூச்சிக்கொல்லியும் கலக்காத லிக்விட் வைத்து கொல்ல நினைப்பார்கள். கரப்பான் பூச்சியை ஒரு நிமிடத்தில் அழிப்பதற்கு கடைகளில் ஹிட் கிடைக்கிறது. ஆனால் அது நாம் சுவாசத்திற்கு அவ்வளவு நல்லது கிடையாது. கரப்பான் பூச்சிகளை அழிக்க பல விதமான செயற்கை பொருட்களை சேர்க்காமல் நம்முடைய சுவாசத்திற்கு ஆபத்து கொடுக்காமல் கரப்பான் பூச்சிகளை அழிக்கும் லிக்விட்டை வீட்டிலேயே நாம் ஈஸியாக தயார் செய்யலாம். அது என்ன லிக்விட் அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை. அதை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லிக்விட் தயார் செய்யும் முறை:

ஒரு பெரிய டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், நறுக்கிய பெரிய வெங்காயம், வேப்ப இலை 2 கொத்து, டெட்டால் 1 மூடி, வாசனைக்காக முகத்துக்கு பூசும் பவுடர் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தையும், வேப்ப இலைகளையும் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீர் ஆறியதும் இதை வடிகட்டிக் கொள்ளவும். இந்த தண்ணீரோடு டெட்டால் 1 மூடி ஊற்றி முகத்துக்கு போடும் பவுடரையும் போட்டு, கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால் கரப்பான் பூச்சியை கொல்லும் லிக்விட் தயார்.

இந்த லிக்விட்டை எந்த இடத்திலும் அடிக்கலாம். அடுப்புக்கு கீழ் பகுதி, மளிகை ஜாமான்கள் அடுக்கி வைத்திருக்கும் இடம், சிங்கு, நிலை வாசல் கதவு, பாத்ரூம் கதவு, கதவுக்கு முன்பக்கம் பின்பக்கம் என அனைத்து இடங்களிலும் இந்த ஸ்ப்ரேவை அடித்தால் போதும். கரப்பான் பூச்சி அந்த இடத்திற்கு வந்தால் உடனே செத்துவிடும். அவ்வளவுதான் இந்த வாசத்திற்கு கரப்பான் பூச்சி உயிர் வாழாது. வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளும் செத்து மடியும். இந்த லிக்வி்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இந்த ஸ்ப்ரேவை அடித்து வந்தாலே கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். ஒரு முறை இந்த ஸ்பிரேவை தயார் செய்து வைத்துவிட்டால் போதும். ஒரு மாதத்திற்கு இதை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த லிக்விட் ஸ்ப்ரேக்கு குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் சின்ன சின்ன வண்டுகள் கூட வீட்டுக்குள் வந்து தொல்லை கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான வீட்டுக் குறிப்பு எல்லா இல்லத்தரசிகளுக்கும் பயனுள்ளபடி அமையும். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Read More: Lok Sabha election Results 2024 : தமிழ்நாட்டின் தொகுதிவாரி தேர்தல் முடிவுகளின் முழு விவரம் இதோ..!!

Baskar

Next Post

நிலவில் மண் மாதிரியை சேகரித்து அசத்திய விண்கலம்!… முதல்நாடு என்ற பெருமை பெற்ற சீனா!... உலக நாடுகள் ஆச்சரியம்!

Wed Jun 5 , 2024
Chinas Change-6: சீனாவின் Chang’e-6 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 நிலவு லேண்டரை விண்ணில் செலுத்தியது. நிலவின் தெற்குப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரிக்க, மூன் லேண்டரில் ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டிய பின் மண் எடுக்க வேண்டும். இந்த […]

You May Like