வெள்ளரிக்காயை ஒரு சிலர் சாலட் வடிவில் சாப்பிடுவார்கள், சிலர் மதிய உணவு அல்லது இரவு உணவில் சாப்பிடுவார்கள். ஆனால், நீங்கள் வெள்ளரியை சரியான முறையில் சாப்பிட்டால், சில நாட்களிலேயே உடல் பருமனை குறைக்கலாம் என்பது தெரியுமா..? வெள்ளரி பல குணங்கள் நிறைந்தது. இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெள்ளரிக்காய் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுக்கு முழுமையான மாற்றாக மாறும்.
வெள்ளரியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. கொழுப்பும் மிகக் குறைவு. ஆனால் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் அதிக ஃபோலேட் நிறைந்துள்ளது. போதுமான அளவு ஃபோலேட் இருப்பதால், இது மற்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. எனவே, வெள்ளரியை சரியாக உட்கொண்டால் மிக விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். TOI படி, வெள்ளரியை சரியான முறையில் உட்கொண்டால், 15 நாட்களுக்குள் எடையை 7 கிலோ வரை குறைக்கலாம். வெள்ளரிக்காய் மிக விரைவாக தொப்பையை குறைக்கிறது. அறிக்கையின்படி, வெள்ளரியை புரதத்துடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் எடை மிக விரைவாக குறையும். அதாவது, போதுமான புரத உணவுடன், போதுமான வெள்ளரிகளை உட்கொள்வது எடையைக் குறைக்குமாம்.
கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் : என்டிடிவியின் கூற்றுப்படி, வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. எனவே இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. வெள்ளரிக்காய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. வெள்ளரிக்காயில் உள்ள எத்தனால் இரத்த குளுக்கோஸை குறைக்கிறது. அடிவயிற்றில் உள்ள கொழுப்பு இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், இந்த இரண்டையும் குறைப்பதால் வயிற்று கொழுப்பைக் குறைக்கிறது.
வயிற்று உப்புசத்தை நீக்கும் : வயிற்றில் கொழுப்பு படிவதால், வாயு பிரச்சனை மற்றும் வயிற்று தொந்தரவு இருக்கும். வெள்ளரி சாப்பிடுவதால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. வெள்ளரி விதைகள் உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காய் விதைகள் வயிற்றில் ஏற்படும் வீக்கம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து வயிற்றில் உள்ள தசைகளை தளர்த்தும்.
மலச்சிக்கலுக்கான சஞ்சீவி : வயிற்றில் புண் இருந்தாலும், வயிறு உப்புசமடையும். உங்கள் செரிமான அமைப்பு மோசமாக இருக்கும் போது, உங்கள் உடலில் கூடுதல் கொழுப்பு இருக்கும். வெள்ளரிக்காயில் போதுமான அளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால், இது மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தொப்பை குறையும்.