குண்டான உடல் ஒல்லியாக வேண்டுமா..? ஒல்லியான உடல் குண்டாக வேண்டுமா..? என்பது போன்ற விளம்பரங்கள் வராத நாளே இல்லை. இதுபோன்ற மக்களின் உடல் அமைப்பை வைத்து காசு பார்க்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இயற்கையான முறையில் மருத்துவ முறைகளை கூறிச் சென்றுள்ளனர். அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டதால் தான், தற்போது எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறோம்.
நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற, கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். அதேபோல், குண்டான உடல் ஒல்லியாக மாற தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மிதமான வெந்நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிந்து குடித்துள்ளனர். இரவில் தூங்குவதற்கு முன்பு இந்த பானத்தை குடிக்கலாம். இதை தொடர்ந்து குடித்து வந்தால், எவ்வளவு பெரிய உடல் பருமனாக இருந்தாலும் அசால்ட்டாக குறைந்துவிடுமாம்.
அதேபோல், இதை தொடர்ந்து குடித்து வருவதால், உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை கூடாமல் தடுத்து நிறுத்தும். வீண் விளம்பரங்களால் கவரப்பட்டு, அதனால் பக்கவிளைவுகளை சந்திக்கும் மக்கள், நம் முன்னோர்கள் கற்றுத்தந்த இயற்கை வழி மருத்துவத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்யலாம்.