fbpx

கரண்ட் பில் அதிகமா வருதா.? இந்த வழிகளை கடைப்பிடிங்க.! அடுத்த மாசம் பாதியா குறையும்.!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பெரும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால், ஒவ்வொரு குடும்பஸ்தர்களும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில எளிமையான வழிகளை கடைபிடிப்பதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

நமது வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண பல்பு மற்றும் டியூப் லைட் ஆகியவற்றிற்கு பதிலாக எல்இடி பல்பு மற்றும் டியூப் லைட்டுகளை பயன்படுத்தலாம். இவை மின்சாரத்தை குறைந்த அளவிலேயே பயன்படுத்தும். மேலும் இந்த பல்பு மற்றும் லைட்டுகள் 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை கிடைக்கின்றன. மேலும் இந்த சாதனங்களின் விலையும் குறைவு. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மின்சார கட்டணத்தை சேமிக்க முடியும்.

மேலும் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் பழைய மின்விசிறிகள் இருந்தால் அவற்றை மாற்றிவிட்டு புதிய மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டும். இந்த மின்விசிறிகளில் பிஎல்டிசி என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் காரணமாக இவை 40 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும், பழைய மின்விசிறிகள் 100-120 வாட்ஸ் மின்சாரத்தை எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலமும் நம்மால் மின்சார கட்டணத்தையும் மின்சார செலவையும் சேமிக்க முடியும்.

உங்கள் வீட்டில் விண்டோ டைப் ஏசி அல்லது ஸ்பிலிட் டைப் ஏசி இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி விட்டு இன்வெர்ட்டர் வகை ஏசிகளை பயன்படுத்த வேண்டும். இவை குறைந்த அளவு மின்சாரத்தையே இயங்குவதற்கு பயன்படுத்துகின்றன. இதன் பிறகு உங்களது மின் கட்டணம் பாதியாக குறையும்.

Kathir

Next Post

ரூ.2,000 வேண்டுமா..? பி.எம். கிசான் திட்டத்தில் e-kyc அப்டேட் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்...?

Fri Nov 17 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23-ம் தேதி விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 24.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை […]

You May Like