fbpx

நன்றாக தூங்க வேண்டுமா?… உங்களுடைய பெட்ஷீட்டிற்கு கீழே இதை வையுங்கள்!… மருத்துவர்கள் பரிந்துரை!

நன்றாக தூங்கவேண்டும் என்றால் பெட்ஷீட்டிற்கு கீழே சோப்பு வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முழுவிவரம் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் அல்லது RLS என்பது ஒரு தூக்கக் கோளாறு ஆகும். சிலர் தூங்கும்போது காலாட்டி கொண்டே இருப்பார்களே அதுதான். கால்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதல் இந்த நோய் பாதிப்பால் ஏற்படுகிறது. பொதுவாக மாலை மற்றும் இரவில் மோசமாக இருக்கும். தூங்கி கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கும்போது இந்த பிரச்சனை தலைதூக்கும். தூங்காமல் சாதாரணமாக நடமாடும்போது இந்த பிரச்சனை இருப்பதில்லை.

கால்களில் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை நகர்த்துவதற்கான (ஆட்டிக்கொண்டே) தவிர்க்கமுடியாத தூண்டுதலால் ஓய்வெடுக்க முடியாது. இதனால் அதிக சோர்வு இருக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் சினிமாவிற்கு செல்லவோ, தூர பயணங்களுக்காக ரயில், விமானம் ஆகியவற்றில் பயணிக்கவும் மிகவும் தயங்குவார்கள். ஒரே இடத்தில் கால்களை அசைக்காமல் இருப்பது இவர்களுக்கு மிகவும் சிரமத்தை கொடுக்கும். நம்முடைய இயக்கம் மற்றும் அனிச்சை செயல்களை கட்டுப்படுத்தும் மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும்போது இந்த ஆர்.எல்.எஸ் பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு பரம்பரையாக வரலாம். இரும்பு சத்து குறைவாக இருப்பது, சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

கால் நடுக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் தூங்குவது சிரமமாக இருக்கும் அதனால் அவர்கள் தூங்கும் படுக்கையில் பெட்ஷீட் கீழே சோப்பு வைத்து தூங்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நிரூபிக்கப்பட்ட சான்றுகள் ஏதும் இல்லை. லாவண்டர் சோப் உங்களுடைய அமைதியின்மை பிரச்சனைக்கு உதவலாம். ஒவ்வொரு மாலையிலும் உங்களுடைய பெட்ஷீட்டுக்கு கீழே அதாவது கால் வைக்கும் இடத்தில் லாவண்டர் சோப்பு வைப்பதால், நடுங்கும் கால்கள் அமைதியாவதை நீங்கள் உணர முடியும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலரும் இந்த முறையை பின்பற்றி உள்ளதாக ஆன்லைனில் பகிர்ந்துள்ளனர்.

Kokila

Next Post

Tnpsc: இணையத்தில் வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்...! எப்படி பார்ப்பது...?

Sat Apr 29 , 2023
தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்‌ பணியை, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மேற்கொண்டு வருகிறது. துணை ஆட்சியர்‌, காவல்‌ துணைகண்காணிப்பாளர்‌ உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்‌ 1முதல்நிலைத்‌ தேர்வு, கடந்த 2022ஆம்‌ஆண்டு நவம்பர்‌ 19-ம்‌ தேதி நடைபெற்றது. இதனை 3 லட்சத்திற்கும்‌ அதிகமானோர்‌ எழுதினர்‌. இந்தநிலையில்‌, நேற்று குரூப்‌ 1முதல் நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள்‌ www.tnpsc.gov.in என்ற […]

You May Like