யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம். யூடியூபை பொறுத்தவரை நமது திறமைதான் முதலீடு. பலதரப்பட்ட மக்களையும் உங்களது சேனலைப் பார்க்க வைப்பதுதான் அதற்குத் தேவையான திறமை. இன்றைக்குப் பலரும் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிறோம். அந்த மொபைலிலேயே ஷூட் செய்து, அதிலேயே எடிட்டிங்கும் செய்ய பல அப்ளிகேஷன்கள் இருக்கின்றன.
குறிப்பாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களது வீடியோக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் குறிப்பிட்ட அளவு வருவாயைப் பெற முடியும். மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்கள் விளம்பரங்கள் மட்டுமல்ல சில பொருட்களை பிரமோஷன் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்
நீங்கள் இந்த யூடியூப் மூலம் வருமானம் பெற விருப்பம் இருந்தால், முதலில் ஒரு சேனலை தொடங்க வேண்டும். அடுத்து மானிடைஸ் செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்பு YouTube Partnership Program-க்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். குறிப்பாக இதற்கு YouTube Studio app-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்.
யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர்க்கு விண்ணப்பிக்க தகுதி :
* உங்கள் கன்டென்ட் கடந்த 12 மாதங்களில் பொதுமக்களிடமிருந்து 4,000-க்கும் மேற்பட்ட வாட்ச் ஹவர்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
* உங்கள் சேனலுக்கு நீங்கள் குறைந்தது 1,000 சப்ஸ்கிரரைபர்களை பெற்றிருக்க வேண்டும்..
* பணம் பெற , உங்கள் யூடியூப் சேனலுடன் AdSense கணக்கை இணைத்திருக்க வேண்டும்.
யூடியூப்-இல் பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
* உங்கள் கூகுள் கணக்கை இயக்க ஸ்டெப் 2 வெரிஃபிகேஷன் செயல்படுத்தவும். உங்கள் கணக்கைப் பாதுகாக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கை அவசியமாகும்.
* உங்கள் யூடியூப் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
* உங்கள் ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்து, “யூடியூப் ஸ்டுடியோ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* இடது பக்கத்தில் உள்ள சைடுபாரில், மோனிடேசேஷன் டேப் -ஐ கிளிக் செய்யவும், பின்பு மோனிடேசேஷன் ஓவர்வியூ பக்கத்திற்கு செல்லும்.
* ரிவியூ பார்ட்னர் ப்ரோக்ராமர் டெர்ம்ஸ் கார்டில், ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து விதிமுறைகளைப் படிக்கவும். நீங்கள் ஒப்புக்கொண்டால், அவற்றை ஏற்க கிளிக் செய்து தொடரவும்.
* உங்களிடம் ஏற்கனவே AdSense கணக்கு இல்லையென்றால், நீங்கள் ஒன்றை உருவாக்கி அதை உங்கள் யூடியூப் சேனலுடன் இணைக்க வேண்டும். இந்த செயல்முறையைத் தொடங்க, “Google AdSenseக்காகப் பதிவு செய்” கார்டில் “ஸ்டார்ட்” என்பதை கிளிக் செய்யவும்.
* செட் மோனிடேசேஷன் பிரஃபிரென்சஸ்” கார்டில் “ஸ்டார்ட்” என்பதை கிளிக் செய்யவும். உங்கள் சேனலில் நீங்கள் இயக்க விரும்பும் விளம்பரங்களின் வகைகளை இங்கே தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் இந்த விருப்பங்களை நீங்கள் பின்னர் சரிசெய்யலாம்.
மேலே உள்ள ஸ்டெப்ஸ்களை நீங்கள் முடித்தவுடன், உங்கள் சேனலை உறுதிசெய்ய YouTubeஆல் மதிப்பாய்வு செய்யப்படும். இந்த செயல்முறை முடிய சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை ஆகலாம். நிறுவனம் மூலம் முடிவு எடுக்கப்பட்டதும் மின்னஞ்சல் மூலம் அந்த தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
Read more ; நேற்று தஞ்சை.. இன்னைக்கு மதுரை.. காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொடூர தாக்குதல்..!!