fbpx

பால் முதல் அரிசி வரை..!! திருமணமான பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!! நீண்ட ஆயுள் கிடைக்குமாம்..!!

தெய்வீகம் நிறைந்த நாளாக வெள்ளிக்கிழமை பார்க்கப்படுகிறது .. அதனால்தான் வெள்ளிக்கிழமைகளில் எல்லா விதமான கடவுள்களையும் வணங்க சொல்கிறார்கள்.. இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்குமாம்.

வெள்ளிக்கிழமையன்று யாருக்கும் கடன் தரவே கூடாது.. அப்படி கடன் தருவது, நிறைய சிக்கலை இரு தரப்பிலும் உண்டு பண்ணிவிடுமாம். எனவே, கடன் வாங்குபவருக்கும், கடன் பெறுபவருக்கும் நிம்மதியே போய்விடும் என்பதால், கடன் தரக்கூடாது என்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு நிறைந்த சர்க்கரை உட்பட எந்தவொரு வெள்ளை நிறத்திலுள்ள பொருட்களையும் தானமாக தரக்கூடாதாம்.. இதில் வெள்ளை நிறத்திலான அரிசியை சேர்த்து கொள்ளலாம். அரிசியையும் தானம் செய்யக்கூடாது.. இதில், தயிர், உப்பு, இட்லி, தோசை மாவு, போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமையில் வீட்டிலுள்ள ஒட்டடை அடிக்க வேண்டாம் என்பார்கள்.. பாத்ரூமையும் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாதாம்.. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது.. ஆனால், வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்யலாம்.. வெள்ளிக்கிழமைகளில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது, அழுக்குகள் சேர்ந்தால் கடன் தொல்லை வந்துவிடுமாம்.

வெள்ளிக்கிழமைகளில் தங்க நகைகளை கழட்டக்கூடாது, அந்த நகைகளை சுத்தம் செய்யவும்கூடாது, அதை பிறருக்கு தரவும் கூடாது.. வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவோ, ஷேவிங், முடிவெட்டவோ கூடாது.. அதேபோல நகம வெட்டவும் கூடாது..

அப்படியானால் வெள்ளிக்கிழமைகளில் தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன தெரியுமா? உலோக தானங்கள் நிறைய செய்ய வேண்டுமாம்.. சர்க்கரை பொங்கல் தானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யலாம் செய்தால் நல்லது என்கிறார்கள்..

வெள்ளிக்கிழமை என்றில்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம் தானம் செய்யலாம். திங்கட்கிழமைகளில் நெய், செவ்வாய்க்கிழமைகளில் மரக்கன்று தானம் செய்யலாம். அதேபோல புதன்கிழமை, கல்வி உபகரணங்கள், வியாழக்கிழமைகளில் வஸ்திரம் போன்றவற்றையும், சனிக்கிழமை எண்ணெய்யை தானமாக அளிக்கலாம். இதன்மூலம், தடைகள் அகலும்

இந்து மதத்தில் நாம் காணும் பல புராணங்களில் கருட புராணமும் ஒன்று. இந்தப் புராணத்தில் நமது வாழ்க்கை தொடர்பான பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. கருட புராணம் தொண்டு பற்றி குறிப்பிடுகிறது. மேலும், வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல மத நூல்களிலும், தர்மத்தின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், தொண்டு மிகவும் புனிதமான செயல் என்று விவரிக்கப்படுகிறது. தானம் செய்யும் போது அதிக பலன்களைத் தரும் சில பொருட்களை தானம் செய்கிறோம்.

கருடபுராணத்தில் பெண்கள் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இந்த 3 பொருட்களை கணவனுக்கு தானம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண் இவற்றை தானம் செய்தால் கணவனுக்கு அதிக ஆயுள் கிடைக்கும். எனவே, திருமணமான பெண் என்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சிவப்பு மிளகாய் : ஒருவருக்கு எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, நோயால் அவதிப்பட்டாலோ, அவரது மனைவி செவ்வாய் கிழமைகளில் சிவப்பு மிளகாய் தானம் செய்ய வேண்டும். இதை தானம் செய்யும்போது தெற்கு நோக்கி தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கணவன் எதிரிகளிடமிருந்து விடுபடுவான்.

உப்பு : கருட புராணத்தின் படி, ஒரு பெண் செய்ய வேண்டிய 2-வது தானம் உப்பு தானம். உப்பு ஒரு மங்களகரமான பொருள், அதை தானம் செய்வதால், உங்கள் கணவரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும். திருமணமான பெண் தன் கையிலிருந்து உப்பை தானம் செய்ய வேண்டும். இது வெறும் அதிர்ஷ்டம் அல்ல. எல்லா வேலைகளிலும் வெற்றியைத் தரும். ஆனால், அந்தி சாயும் நேரத்தில் உப்பை தானம் செய்யக்கூடாது.

பால், அரிசி மற்றும் சர்க்கரை : மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் திங்கட்கிழமை கோயிலில் பால், அரிசி மற்றும் சர்க்கரை தானம் செய்தால், அவரது கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும், கணவரின் வீட்டிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.

Read More : IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் தோனி..!! சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Friday is seen as a day full of divinity..that’s why they say to worship all kinds of Gods on Fridays..

Chella

Next Post

காவல்துறையின் நிபந்தனை!. தள்ளிப்போகிறதா மாநாடு!. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்!.

Thu Sep 12 , 2024
Condition of the police! Is the conference postponed? Vijay makes an important announcement!

You May Like