மொபைல் போனின் பேட்டரி லைஃப் என்பது நீங்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்துதான் இருக்கிறது. நீங்கள் மொபைலை எவ்வளவு நேரம் பயன்படுத்துறீர்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துறீங்க என்பதை பொறுத்துதான் மொபைல் போன் பேட்டரி உறுதிப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் செய்யும் தவறு அறிந்தும் செய்கிறார்கள். சிலர் அறியாமலும் செய்கிறார்கள். ஜார்ச் செய்யும் போது எந்த தவறை செய்ய கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
மொபைல் சார்ஜிங் டிப்ஸ் : உங்கள் மொபைலின் ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தாமல் வேறொரு சார்ஜர் மூலம் உங்கள் போனை தினமும் சார்ஜ் செய்து கொண்டே இருந்தால், போன் பேட்டரி பழுதடைந்து, போன் தீப்பிடிக்கும் அபாயம் அதிகரிக்கிறது. ஒரிஜினல் சார்ஜரை வீட்டில் மறந்துவிட்டு அலுவலகத்திற்குச் சென்று வேறொருவரின் சார்ஜரைக் கொண்டு மொபைலை சார்ஜ் செய்தால் கவனமாக இருங்கள். வேறொரு நிறுவனத்தின் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்வது பல நேரங்களில் போன் வெடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
உதாரணமாக உங்கள் ஃபோன் 18 வாட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. வேறொரு நிறுவனத்தின் 80 வாட் சார்ஜரைப் பயன்படுத்தி உங்கள் ஃபோனை சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் பேட்டரி வெடித்து பெரிய அளவி சேதத்தை ஏற்படுத்தும். ஒரிஜினல் சார்ஜருக்குப் பதிலாக வேறு சார்ஜரைக் கொண்டு ஃபோனை சார்ஜ் செய்யும்போது போன் அதிக வெப்பமடையச் செய்யலாம்.
சார்ஜர் போனுடன் பொருந்தவில்லை என்றால், உங்கள் போனின் பேட்டரி திறன் குறைவாக இருக்கலாம். இது பேட்டரியை விரைவில் சேதப்படுத்தும். திரை, மென்பொருள் பிரச்சனைகள்.. ஃபோனுடன் வந்த சார்ஜருக்கு பதிலாக உள்ளூர் சார்ஜர் அல்லது வேறு நிறுவனத்தின் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்தால் போனின் திரை, ஹார்டுவேர் சேதமடையலாம்.