fbpx

உஷார்..!! காயத்திற்கு ஒட்டப்படும் பேண்டேஜால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! ஆய்வு முடிவில் வெளியான பகீர் தகவல்..!!

உடலில் சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்ட உடனே முதலுதவியாக பேண்டேஜை எடுத்து காயத்தின் மீது ஒட்டிவிடுவோம். காயத்தைக் குணப்படுத்தும் பேண்டேஜ் புற்றுநோய் போன்ற கொடிய நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் நுகர்வோர் பாதுகாப்பையும் கண்காணிக்கும் அமைப்பான Mamavation மற்றும் Environmental health news இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இந்த ஆய்வில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேண்டேஜ்களில் PFAS எனப்படும் பாலி ஃப்ளுரோஅல்கையில் மற்றும் PTFE எனப்படும் பாலி டெட்ரோ ஃப்ளுரோ எத்திலின் போன்ற வேதிப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 40-க்கும் மேற்பட்ட பிரபல பிராண்டுகளின் பேண்டேஜ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 26 பிராண்டுகளில் இந்த வேதிப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த நச்சுயியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியரும், அந்நாட்டு தேசிய சுற்றுச்சூழல் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான மருத்துவர் லிண்டா எஸ் பிர்ன்பாம் கூறுகையில், “PFAS போன்ற கரிம வேதிப்பொருள்கள் பொதுவாக கறைகள், எண்ணெய்ப் பசைகள் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக சேர்க்கப்படுபவை. இவை பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் பொருள்களின் தயாரிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும்.

காயத்தைக் குணப்படுத்த PFAS போன்ற வேதிப்பொருள்கள் அவசியம் இல்லை. ஆனால், பேண்டேஜ்களில் ஒட்டுவதற்கான பசை இருக்கும் பகுதிகளில் அவை காணப்படுகின்றன. காயத்தில் நீர் புகுந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெட்டுக் காயங்கள் போன்ற உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களில் பேண்டேஜ்கள் ஒட்டப்படும்போது அது ரத்தத்தினுள் கலந்து திசுக்களில் ஒட்டி வளர்ச்சி அடையக்கூடும். இது பல ஆண்டுகளாக மனித உடலிலேயே தங்கியிருக்கும்.

இதனால் தைராய்டு, இனப்பெருக்க பிரச்சனை, வளர்ச்சி ஹார்மோன்கள் பாதிப்பு, உடல் பருமன் கோளாறுகள், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, நாளமில்லா சுரப்பி சீர்குலைவு போன்ற பிரச்சனைகள், உயிரையே பறிக்கக்கூடிய புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை 56% வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது‌. எனவே, தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது விற்பனையில் இருக்கும் பேண்டேஜ்களை (Bandage) திரும்பப் பெற்று, வேதிப்பொருள்கள் இல்லாதவற்றை உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : ஏசி அறையில் படுத்து தூங்கினால் இந்த பிரச்சனைகள் நிச்சயம் வரும்..!! இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க..!!

English Summary

Recent research has found that wound-healing bandages have the potential to cause deadly diseases like cancer.

Chella

Next Post

ரயில் பயணத்தின்போது இதைமட்டும் செய்யாதீங்க.. மதுபானம் தொடர்பான விதிகள் சொல்வது என்ன?

Wed Apr 23 , 2025
Don't do this while traveling by train.. What are the rules regarding alcohol?

You May Like