fbpx

எச்சரிக்கை!. காஷ்மீரில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்!. நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்!.

Dengue: ஜம்முவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் சமீபகாலமாக டெங்கு பாதிப்பு தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஜம்முவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜம்முவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நோய் பாதிப்பு அதிகரிக்கலாம், ஆனால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இதுவரை, 27,809 பேருக்கு டெங்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.

அதில் 5,009 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,009 பேரில், 425 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு பாதிப்புக்கு ஆளான நோயாளி ஒருவர் உயிரிழந்தார்” என்றனர்.

Readmore: காது கேளாத கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது..!! – டெங்கு பரவலை தடுக்க விஞ்ஞானிகள் புதிய ஆய்வு

English Summary

Warning! Dengue fever in 5 thousand people in Kashmir! The incidence of disease will increase!

Kokila

Next Post

ஒன்றாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

Thu Nov 7 , 2024
A 14-year-old boy raped a class one girl.

You May Like