fbpx

எச்சரிக்கை!… நான்-ஸ்டிக் குக்வேரை பயன்படுத்தாதீர்கள்… கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்!

சமையலறையில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் சில கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை 4.5 மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரியவந்துள்ளது.

உயர் PFOS அமில அளவுகளை வெளிப்படுத்துவது வைரஸ் அல்லாத HCC என்ற புற்று நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று பகுப்பாய்வு காட்டுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த இரசாயனங்கள்(PFAS), பலவிதமான நுகர்வோர் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதை பயன்படுத்தி உருவாக்கப்படும், நான்-ஸ்டிக் குக்வேர், குழாய் நீர், ஒரு சில கடல் உணவுகள். இந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஏதேனும் ஒரு வழியில் உட்கொண்ட பிறகு கல்லீரலில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியபட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் உலகளவில் கல்லீரல் புற்றுநோய், 6வது மிகவும் பொதுவான புற்றுநோய் ஆகும். மேலும் இது 3 வது முன்னணி புற்றுநோய் மரணமாகவும் இருந்தது.

அமெரிக்காவில், கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 1980 ஆம் ஆண்டிலிருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. HCC மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாகும். 2021 இல், கல்லீரல் புற்றுநோயானது புற்றுநோய் இறப்புகளுக்கு 5வது மற்றும் 7வது முக்கிய காரணமாகும். அதன்படி ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் யு.எஸ். ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (எச்.சி.சி) கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது 85 சதவீத பாதிப்புகளுக்கு காரணமாகும். உலகளாவிய தடுப்பூசி முயற்சிகள் மற்றும் பயனுள்ள வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் ஹெபடைடிஸ் பி (HBV) மற்றும் C (HCV) தொடர்பான HCC புற்று நோயை குறைக்க உதவினாலும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) தொடர்பான HCC அதிகரித்து வருகிறது.

Kokila

Next Post

சீசன் வந்தாச்சு!... கவனமாக இருங்கள்!... செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள்!

Tue Mar 21 , 2023
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். இந்த பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியவுடன் பழக்கடைகளில் அதிகமாக இதனை காணமுடியும். அதுமட்டுமல்லாமல் சாலையோர தள்ளுவண்டி கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை கடைகளிலும் மாம்பழ விற்பனை அமோகமாக நடைபெறும். இதனை […]

You May Like