தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளைப் போலவே, தூக்கமும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்குவது முக்கியம்.. ஏனெனில் உங்கள் உடல் ஓய்வெடுக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரம் தேவைப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வயதைப் பொறுத்து தூங்குவதற்கான நேரம் மாறுபடும்.
நிறைய பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட மக்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.. எப்போதாவது அதிக நேரம் தூங்குவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆனாலும், தொடர்ந்து அதிக நேரம் தூங்கினால், அது உங்கள் உடலை பல வழிகளில் பாதிக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிக தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. எனவே, அதிக தூக்கத்தால் ஏற்படும் சில விளைவுகளை தெரிந்துகொள்வது அவசியம்.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
தலைவலி : அதிக தூக்கம் தலைவலிக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கும்.. மேலும் சில நரம்பியக்கடத்திகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி பகலில் நீண்ட நேரம் தூங்குவது உங்கள் இரவுநேர தூக்கத்தை பாதிக்கும்.. இது தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
உடல் பருமன் : அதிக தூக்கம் உடல் பருமனை ஏற்படுத்தும், எனவே, ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 7 முதல் 8 மணி நேரத்திற்கும் அதிமாக தூங்குவது உடல் பருமனை ஏற்படுத்தும். இருப்பினும், தேவையான நேரத்தை விட குறைவாக தூங்குவது உடல் பருமனுக்கு காரணமாக இருக்கலாம். எனவே, உங்கள் வழக்கமான தூக்க நேரத்தை கடைபிடிப்பது அவசியம்..
டைப் 2 நீரிழிவு நோய் : தேவையான நேரத்தை விட அதிகமாக தூங்குவது உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். உடல் பருமனுடன் அதிக தூக்கமும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, எனவே உங்கள் தூக்க நேரத்தைக் கண்காணிப்பது அவசியம்.
இருதய நோய் : அதிக தூக்கம் இதய நோய்க்கு வழிவகுக்கும். தேவையான நேரத்தை விட அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக தூக்கத்திற்கும் இதய நோய்க்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், 7முதல் 8 மணி நேரம் தூங்குபவர்களை விட ஒவ்வொரு இரவும் 11 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனச்சோர்வு : மனச்சோர்வு உள்ளவர்களில் பலர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மக்கள் அதிகமாக தூங்க முனைகிறார்கள். அதிக தூக்கம் நிலைமையை மிகவும் மோசமாக்கும், எனவே தூக்கத்தின் நேரத்தைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்..