fbpx

இரவு நேர ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை!… இதற்கெல்லாம் அனுமதி கிடையாது!… புதிய கட்டுப்பாடு விதித்த இந்திய ரயில்வே!

இரவு நேர பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளத்து.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது போனில் சத்தமாகப் பேசக் கூடாது. அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கக் கூடாது. தேவையென்றால் ஹெட்-போன் போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்கலாம். 10 மணிக்கு மேல் மின் விளக்குகளை அணைத்துவிடவேண்டும். இரவு நேர விளக்கு மட்டும் பயன்படுத்தலாம். இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர், டிக்கெட்களை சரிபார்க்கப் பயணிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது. 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசிக்கொண்டு செல்லக் கூடாது. நடு படுக்கை இருக்கையில் உள்ள பயணிகள் 10 மணிக்கு மேல் படுக்க வேண்டும் என்றால் அதற்குக் கீழ் இருக்கை பயணிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு டெலிவரி கிடையாது. ஆனால் காலை உணவை இரவே ஆர்டர் செய்யலாம். புகைப்பிடித்தல், மது அருந்துவது, எளிதில் பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை மீறுவதைக் கண்டறிந்தால், பயணிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ஆகியோரும் பயணிகளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க வழிநடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Kokila

Next Post

மக்களே எச்சரிக்கை!… வங்கி கணக்கே இல்லாதவர் பெயரில் ரூ.172 கோடி மோசடி!… உ.பி.யின் அதிர்ச்சியும்! பின்னணியும்!

Fri Mar 10 , 2023
உத்தரப்பிரதேசத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் ரூ.172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் ராஸ்தோகி. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தினசரி ஒரு சில நூறு ரூபாய்களுக்கு மட்டுமே லாபம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்கறி வியாபாரி விஜய் ராஸ்தோகி வங்கி கணக்கில் 172 கோடி இருப்பு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. […]

You May Like