fbpx

ஆண்களே எச்சரிக்கை!… இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்!… ஆபத்தும்! அறிவுறுத்தலும்!…

30 வயது ஆண்கள் முதுகு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்த உதவும் உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. இதில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை செய்துவருகின்றனர்.

ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை தினமும் செய்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் ஜிம்மிலும், இன்னும் சிலர் வீட்டிலும் செய்து வருகிறார்கள். உடற்பயிற்சிகளை அந்தந்த வயதிற்கு ஏற்ப செய்ய வேண்டும். சிலர் 20-களில் செய்து வந்த உடற்பயிற்சிகளை, 30-களில் முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறு. அப்படி செய்யும் போது அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க்குகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் 25 வயதை எட்டும் போது டிஸ்க்குகள் வறண்டு போகத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே 30 வயதை எட்டிய ஆண்கள் ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சிட்-அப்ஸ் மிகவும் மோசமான உடற்பயிற்சி, குறிப்பாக 30 வயதுகளில் இதை செய்வது என்பது பல மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும். ஏனெனில் சிட்-அப்ஸ் செய்யும் போது, கீழ் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது, அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க் இறக்கப்படலாம். டெட்லிஃப்ட் என்பது கடினமான உடற்பயிற்சி. இதை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இதுவரை டெட்லிஃப்ட் பயிற்சி செய்ததில்லை என்றால், அதை 30 வயதுகளில் முயற்சிக்கக்கூடாது. தவறான நிலையில் டெட்லிஃப்ட் பயிற்சியை செய்யும் போது, அதன் விளைவாக இடுப்பு முதுகுத்தண்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ரோ பயிற்சிகளை செய்யும் போது, கோர் தசைகள் (வயிற்றுப் பகுதி) இறுக்கமாக இருக்க வேண்டும் மற்றும் வளைந்து கொண்டு செய்யக்கூடாது. தவறான முறையில் ரோ பயிற்சிகளை செய்தால், அதன் விளைவாக கடுமையான முதுகு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஓவர்ஹெட் பிரஸிங் உடற்பயிற்சிகள் மோசமானவை அல்ல. ஆனால் நீங்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவரானால், இந்த பயிற்சிகளை பெரும்பாலானோரால் சரியான முறையில் செய்ய முடியாது. தவறான நிலையில் மற்றும் முறையில் இப்பயிற்சியை செய்யும் போது, அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி மற்றும் உடலினுள் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். நிறைய பேருக்கு அதிகளவில் பிடிக்கும் லெக் பிரஸ் பயிற்சியை அதிகமாக செய்யும் போது, அதன் விளைவாக கீழே முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, முதுகு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Kokila

Next Post

எட்டாம் வகுப்பு முதல் எம்பிபிஎஸ்! தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் சேர்வதற்கு உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். மேலும் மெடிக்கல் ஆபீசர் […]

You May Like