கழிவறை இருக்கையில் உள்ளதைவிட வாட்டர் பாட்டல்களில் 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
waterfilterguru.com என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பலவிதமான பாட்டில்களைக் கொண்டு ஆய்வு நடத்தியது. அதில் gram-negative rods மற்றும் bacillus என்ற இரண்டு பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்த ஆய்வின் படி, gram-negative bacteria என்பது உடலில் தொற்றுகளை உருவாக்கும் என்றும் bacillus பாக்டீரியா இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாக்கள், சமையலறை சிங்கில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாகவும். கம்பியூட்டர் மெளஸ்ஸில் உள்ளதை விட 4 மடங்கு அதிகம் என்றும் மற்றும் செல்லப் பிராணியின் தண்ணீர் கின்னத்தை விட 14 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டர் பாட்டில்களில் உள்ள பாக்டீரியா கேடு விளைவிப்பது கிடையாது என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர் நிபுணர் மற்றும் உதவி பேராசிரியர் கியோங் யாப் தெரிவித்தார். மேலும் லண்டனைச் சேர்ந்த மூலக்கூறு நுண்ணுயிரியலாளர் டாக்டர். ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ் கூறுகையில், மனித வாய் ஏராளமான பாக்டீரியாக்களுக்கு வீடாக இருக்கிறது. அப்படி இருக்கப் பாட்டிலில் இருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். squeeze-top பாட்டில்களில் பாக்டீரியாவின் அளவு குறைவாகவே உள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாக்டீரியாக்களினால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் மீண்டும் பயன்படுத்தும் பாட்டில்களை சுடுதண்ணீரில் கழுவது அவசியமாகவுள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.