பிரஷில் எவ்வளவு பேஸ்ட் போட்டு பல் தேய்க்க வேண்டும் என்பதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
காலை எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலையே பல்லை பிரஷ் செய்வதுதான். பல ஆண்டுகளாக பல் துலக்கினாலும் எவ்வளவு டூத்பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்ற பதில் பலருக்கும் தெளிவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பற்களை சுத்தம் செய்ய தங்களுக்கு இவ்வளவு பேஸ்ட் தேவைப்படும் என்று அவர்களாகவே குறிப்பிட்ட அளவை நிர்ணயித்து கொள்கிறார்கள். பெரும்பாலானோர் நினைப்பது என்னவென்றால் அதிகமாக பேஸ்ட் பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இவர்களது இந்த எண்ணம் மிகவும் தவறானது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதிகப்படியான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே வாயில் நுரையை உருவாக்கும் அளவிற்கு மட்டுமே டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். Health.com வெப்சைட்டில் கொடுக்கப்படுத்தால் தகவல்களின்படி, டூத்பேஸ்ட் தொடர்பான விளம்பரங்களில் விஷுவலாக காட்டப்படும் டூத்பேஸ்ட்டின் அளவு குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
பல்துலக்க அதிகப்படியான பேஸ்ட் பயன்படுத்துவது தீவிர வாய்வழி சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உங்கள் பற்களை தூய்மையாக்க ஒரு பட்டாணி அளவிலான டூத்பேஸ்ட் போதுமானது. மேலும் இந்த அறிவுறுத்தல் பொதுவாக பெரும்பாலான டூத்பேஸ்ட் பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல குழந்தைகள் டூத்பேஸ்ட் டேஸ்ட்டாக இருக்கிறதே என்று அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி டூத்பேஸ்ட்டை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் பால் பற்கள் பாதிக்கப்படும். ஏனென்றால் அதீத ஃப்ளூரைடு நுகர்வு, வளரும் பற்களில் ஃப்ளோரோசிஸ் எனப்படும் காஸ்மெட்டிக் கண்டிஷனுக்கு வழிவகுக்கும். ஃப்ளோரோசிஸ் என்பது பற்களில் மஞ்சள் அல்லது பழுப்பு நிற புள்ளிகளை ஏற்படுத்தும் ஒரு நிலை. இது ஒரு அழகுப் பிரச்சனையாக இருக்குமே தவிர ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது.
எனவே பற்களை பாதுகாக்க நினைக்கும் பெரியவர்கள் அல்லது குழந்தைகள் என யாராக இருந்தாலும் இருந்தாலும் பல்துலக்க பட்டாணி அளவிலான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரம் மிகக்குறைவான அளவிலான டூத்பேஸ்ட் பயன்படுத்துவதும்கூட பல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தும். போதுமான பேஸ்ட் பயன்படுத்தாவிட்டால் நுரையை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால் பல் கிளீன் ஆகாது. மேலும் பற்களைப் பாதுகாக்க போதுமான ஃப்ளூரைடு கிடைக்காது.
அதேபோல சிலர் பிரஷ் செய்யும்போது சிலர் நுரையை உண்டாக்க வாயில் தண்ணீர் வைத்து கொள்வார்கள் அல்லது பிரஷ்ஷை தண்ணீரில் நனைத்து கொள்வார்கள். வாயில் தண்ணீர் இருந்தாலோ அல்லது பிரஷ் அதிக ஈரமாக இருந்தாலோ ஃப்ளூரைடு பற்களில் வேலை செய்யாது. எனவே பற்களை சுத்தம் செய்யும்போது தண்ணீரை பயன்படுத்த கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பற்களை நன்றாக பிரஷ் செய்த பின்னர் தண்ணீரை பயன்படுத்தலாம். தினசரி பல் துலக்குவதை தவிர வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க தினசரி இருவேளை மவுத்வாஷை பயன்படுத்தலாம். இது ஃப்ளூரைடு அளவை அதிகரித்து பற்கள் மற்றும் வாய் இரண்டைம் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும்.