fbpx

மக்களே எச்சரிக்கை!… கேட்பரி சாக்லேட்டுகளை சாப்பிடாதீர்கள்!… திரும்ப பெற்ற நிறுவனம்!… என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தில் பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இனிப்புகளில் ஒன்று கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகள். இது பல அளவுகளில் வெவ்வேறு சுவையோடு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேட்பரி நிறுவனத்தின் 75 கிராம் சாக்லேட்டுகளின் மூலம் லிஸ்டீரியோசிஸ் எனப்படும் பாக்டீரியா நோய்த்தொற்று தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி அந்நிறுவனம் இங்கிலாந்து கடைகளில் இருந்து தங்களது இனிப்பு வகைகளை திரும்பப் பெற்றுள்ளது.

மேலும் கேட்பரி இனிப்பு வகைகளில் இருந்து கேட்பரி கிரஞ்சி, கேட்பரி டைம், கேட்பரி ஃப்ளாக், கேட்பரி டெய்ரி மில்க் பட்டன்ஸ், டெய்ரி மில்க் சங்க்ஸ் ஆகிய இனிப்புகளையும் அந்நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து யாரேனும் கடைகளில் இந்த வகை இனிப்புகளை வாங்கியிருந்தால் மீண்டும் அதைக் கடைகளில் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக சாக்லேட்டுகளைச் சாப்பிட வேண்டாம் என்று இங்கிலாந்தில் எச்சரிக்கை செய்திருப்பதால் மக்கள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லிஸ்டீரியோசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட் டோஜென்ஸ் எனும் கிருமியால் ஏற்படும் தீவிரநோய்த்தொற்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகை தொற்றுள்ள உணவுகளைச் சாப்பிட்ட பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்பிணி பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், வயதானவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளில் நோய்த்தொற்று பாதிப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறி திரும்பப் பெறப்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் இந்தியாவிலும் இதுபோன்ற தொற்றுகள் ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

நான் காதலில் துரதிர்ஷ்டாலி!... எனக்கு குழந்தைகள் வேண்டும்!... ஆனால் அதற்கு சாத்தியமில்லை?... நடிகர் சல்மான் கான்!

Fri May 5 , 2023
எனக்கு குழந்தைகள் பிடிக்கும். அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இந்திய சட்டத்தில் அதற்கு சாத்தியமில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் சுவாரஸிமாக பேட்டியளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் சல்மான் கான். அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்கினாலும் பாலிவுட்டில் அசைக்க முடியாத நட்சத்திரமாக திழ்ந்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்ல பிரம்மாண்டமான பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்.சமீபத்தில் […]

You May Like