fbpx

எச்சரிக்கை!… சுட்டெரிக்கும் வெயில்!… ஐஸ் க்ரீம் சாப்பிடுபவர்களா நீங்கள்?… அப்போ இதை கண்டிப்பா படிங்க!…

கோடை வெயிலுக்கு இதமான உணர்வை அளிக்கும் ஐஸ் க்ரீம்களை எப்படி முறையாக சாப்பிடவேண்டும்? எவ்வளவு அளவு சாப்பிடுவது நல்லது? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நம் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. குறைவாக இருந்தால் நோய் ஏற்படும். நம் உடல் நமக்கு சில சிக்னல்களை அனுப்புகிறது. அதைக் கண்டறியும் சக்தி இருந்தால், நம் ஆரோக்கியத்தைப் பேணுவது எளிது. நம்மில் பலருக்கு ஐஸ் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஐஸ் கட்டிகளை அப்படியே சாப்பிடுவது உண்டு. இதனால் வாய் மற்றும் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் ஐஸ் கட்டிகள் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கவனமாக இருங்கள். இது ஒரு வகையான நோய்.

நாம் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். ஆரோக்கியமான உணவு, நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. உடலுக்குச் சரியான சத்துக்கள் கிடைக்காவிட்டால், உடல் நோயால் பாதிக்கப்படும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது நம்மை படுத்த படுக்கையாக ஆக்குகிறது. நம் உடலில் வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடு குறைவாக இருப்பதை நம் உடல் பல வழிகளில் காட்டுகிறது.

கோடையில் குளிர்ச்சியான ஐஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு சீசன் பாராமல் ஐஸ் சாப்பிட ஆசை இருக்கும். ஐஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் ரத்தசோகையை காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இரத்த சோகை பிரச்சனை நீங்குவதால், ஐஸ் சாப்பிடும் ஆசை குறைகிறது. மாற்றாக, உங்கள் உணவில் கோழி, முட்டை, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ஐஸ் க்ரீமில் கால்சியம், வைட்டமின் டி, ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவையாவும் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது.

ஐஸ்க்ரீம்களின் அதிகப்படியான, நுகர்வு நம் இரத்த சக்கரை அளவில் மாற்றத்தை உண்டாக்கலாம். அந்தவகையில் இது சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மேலும் இது இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். இதன்விளைவாக இரத்த அழுத்த பிரச்சனைகள் மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நிபுணர்கள் கூற்றுப்படி, ஐஸ் க்ரீம்களை தினமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஐஸ் க்ரீமின் தொடர்ச்சியான நுகர்வு பற்சிதைவு, இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஐஸ்க்ரீமில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு உங்கள் செரிமான செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே இரவு நேரங்களில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது நல்லதல்ல. அதாவது ஐஸ் க்ரீம்களை காலை நேரங்களில் சாப்பிடுவது நல்லது. உணவுக்கு பின் ஐஸ்க்ரீம்களை சாப்பிட்டால் புத்துணர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கொழுப்பு நிறைந்த ஐஸ் க்ரீம்களை காலை வேளையில் சாப்பிடக்கூடாது. இதில் காணப்படும் சர்க்கரை உள்ளடக்கம் கல்லீரல் சேதம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். ஐஸ்க்ரீம்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. சர்க்கரையின் அளவை பொறுத்து ஐஸ்க்ரீம்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தவகையில் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படும் கலோரியின் அளவில் 10% அளவுக்கு மட்டும் ஐஸ் க்ரீம் இருக்கவேண்டும்.

Kokila

Next Post

முட்டைகளை நீண்டநாள் கெட்டு போகாமல் தடுக்க!... இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!...

Sun May 7 , 2023
முட்டைகள் நீண்டநாள் கெட்டு போகாமல் தடுக்கும் முறைகள் குறித்து இங்கு பார்க்கலாம். முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிரம்பியுள்ளன. புரதத்துக்கு சிறந்ததொரு ஆதாரம் முட்டை. முட்டை ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப்பாயில், கலக்கி, கரண்டி ஆம்லேட், சுருள் ஆம்லேட், பிரட் ஆம்லேட் என முட்டையில் பல்வேறு ரெசிப்பிகளும் வந்துவிட்டன. இதனால் மக்கள் இப்போது முட்டைகளை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்து விடுகின்றனர். முட்டைகள் பொதுவாக நீண்ட நாட்கள் தாங்காது. ஆனால் பக்குவமாக […]

You May Like