டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மை, ஊசிகள் கொடிய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சுகாதார நிபுணர்களின் கூற்றுபடி, சில மைகளில் எத்தனால் போன்ற தனிமங்கள் இருப்பதால், நமது சருமம் கடுமையான நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. நீங்கள் எப்போது டாட்டூ குத்திக் கொண்டாலும், முதலில் அதில் எந்த விதமான பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் டாட்டூ போட்ட பிறகும் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்.
மேலும், பச்சை குத்தப்பட்டவர்களின் தோலில் கடுமையான தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. டாட்டூ குத்தும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு முன் தோல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் சருமத்தில் இந்த நிறங்களால் ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம்.