Marburg virus : ருவாண்டாவில் மார்பர்க் வைரஸ் நோய் பரவி, இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பர்க் வைரஸ் (Marburg virus ) நோய் ஒரு வைரஸ் நோயாகும். இது ரத்த கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. 2023-ல் ஈக்வடோரியல் கயானாவில் இந்த மார்பர்க் வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. இந்நோய் முதன்முதலில் 1967-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள மார்பர்க் மற்றும் பிராங்பர்ட்டில் கண்டறியப்பட்டது. Rousettus aegyptiacus என்ற பழ வெளவால்கள் மார்பர்க் வைரஸின் இயற்கையான நோய் பரப்புனர்களாக கருதப்படுகின்றன. இவற்றில் இருந்தே வைரஸ் மக்களுக்குப் பரவுகிறது.
இந்தநிலையில், இந்த கொடிய வைரஸ் ருவாண்டா, புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு, காபோன், கென்யா, உகாண்டா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, கியூபா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், கயானா, பனாமா மற்றும் பெரு ஆகிய 17 நாடுகளில் பரவியுள்ளது. இது மற்ற இரண்டு தீவிர தொற்று நோய்களான mpox Clade I மாறுபாடு மற்றும் வெப்பமண்டல Oropouche காய்ச்சல் மூலம் பல நாடுகளில் பரவல் அதிகரித்துள்ளது.
யுகே ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (யுகேஹெச்எஸ்ஏ) நடத்தும் டிராவல் ஹெல்த் ப்ரோ, இந்த கொடிய வைரஸ்களின் “மூன்று அச்சுறுத்தல்” பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. “mpox clade I மற்றும் Oropouche இன் பல நாடுகளில் பரவல்களும் நடந்து வருகின்றன.”உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் 88 சதவிகிதம் வரை வழக்கு-இறப்பு விகிதம் (CFR) உள்ளது, இது பாதிக்கப்பட்ட 10 நபர்களில் 9 பேருக்கு ஆபத்தானது என்பதைக் குறிக்கிறது.
எனவே, இந்த வைரஸுக்கு தடுப்பூசி இல்லை என்பதால், வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தலைவலி, தசை வலி, மூட்டு விறைப்பு, ஒளி உணர்திறன் மற்றும் வாந்தி ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் இரத்த மூளையை தடையை தாண்டி மூளைக்காய்ச்சல் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.