fbpx

தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை..!! அடுத்த 5 நாட்களுக்கு உஷார்..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப அலை பரவ கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்திலும் பரவி வரும் வெப்ப அலை தென்னிந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் தொடக்கத்திற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை முதலே அதிக வெயில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும், வெயில் மரணங்களும் அதிகரித்துள்ளது. தினமும் 30 முதல் 35 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிலும் 5 நாட்கள் வெப்ப அலை பரவுவதோடு, வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பீகார், சிக்கிம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகளால் உண்டாகும் காற்றின் ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. எனவே, வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது தொப்பி மற்றும் குடையை பயன்படுத்துவது அவசியம். இதனால் வெளியில் செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

Read More : ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களை பறித்துவிடுவார்கள்”..!! பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

Chella

Next Post

"யூடியூப்பிற்கு சவால் விடும் எலான் மஸ்க்கின் பிரத்யேக டிவி APP…" "X" தலைமை நிர்வாக அதிகாரி உறுதி..!

Wed Apr 24 , 2024
எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான X அதன் X TV பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளது . மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் பகிரப்பட்ட ஒரு இடுகையில், வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடு விரைவில் தொடங்கப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ உறுதிப்படுத்தியுள்ளார் . லிண்டா யாக்காரினோ கூறியதாவது, “விரைவில் நாங்கள் X TV ஆப் மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவிகளில் நிகழ்நேர உள்ளடக்கத்தை கொண்டு வருவோம். பெரிய […]

You May Like