3rd world war: அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கத்திய தயாரிப்பான நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் உக்ரைன் ரஷ்ய நிலப்பரப்பைத் தாக்க அனுமதித்தால், மேற்கு நாடுகள் நேரடியாக ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் என்று செப்டம்பர் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியிருந்தார். இந்த நடவடிக்கை மோதலின் தன்மையையும் நோக்கத்தையும் மாற்றும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், ஸ்டேட் டுமாவின் கீழ்சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி, அமெரிக்காவின் ATACMS தந்திரோபாய ஏவுகணைகள் மூலம் ரஷ்யா மீது Kyiv தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்குவது கடுமையான பதிலுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“ரஷ்ய பிராந்தியங்களுக்குள் ஆழமாக அமெரிக்க ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் தவிர்க்க முடியாமல் ஒரு தீவிரமான விரிவாக்கத்தை ஏற்படுத்தும், இது மிகவும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று TASS செய்தி நிறுவனம் ஸ்லட்ஸ்கி கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
Readmore: டாடா ஸ்டீல் செஸ்!. சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!.