fbpx

வாஷ் பண்ணுங்க! வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க!… இன்று உலக கைகழுவுதல் தினம்!

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதியும்’கை கழுவுதல் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. கைகழுவுதல் எவ்வளவு அவசியம் என்பதை கொரோனா பெருந்தொற்று நமக்கு நிரூபித்துவிட்டது.

மக்கள் இயல்பாக நோய்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 15தேதியை உலக கை கழுவும் தினமாக அறிவித்தது. அதன் படி இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம்தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் அதைக் கொண்டாடியும் வருகிறது. இந்த தினம் கொண்டாட்டத்திற்கானது என்று சொல்வதை விட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதே சரியாக இருக்கும்.

எதற்காக கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளங்கையில் அப்படி என்ன அழுக்குகள் சேர்ந்துவிட போகி றது என்று கேட்கிறீர்களா? கண்ணுக்குத் தெரியாத பல்வேறு நோய்க்கிருமிகள் கைகளில்தான் இருக்கின்றன. கைகளைச் சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது கிருமிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், ஜலதோஷம் போன்ற நோய்களை உண்டாக்கி விடுகின்றன. அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு தற்போது நீண்ட காலமாக நம்மை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று என்று சொல்லலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்கிவிடும் என்பதால் எப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆரோக்கியக் குறைபாட்டை உண்டாக்காது. கை கழுவுவது சிறிய விஷயம் தான். ஆனால் இதை முறையாக செய்யும் போது உடலில் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படுகிறது. தண்ணீரில் கைகளை கழுவினாலே சுத்தம் செய்தது என்று நினைக்க வேண்டாம். அதற்காக வாஷ்பண்ணிக்கிட்டே வாஷ் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

கைகளை வெறும் நீரில் கழுவாமல் சோப்பு அல்லது சோப்பு நீர் போட்டு தேய்த்து கழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இப்படி செய்வதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ளலாம். சோப்பு போட்டு கைகளை உடனே கழுவாமல் 30 விநாடிகளாவது கைவிரல்கள் நக இடுக்குகள் விரல் இடுக்குகளைக் கழுவுவதன் மூலம் 80 சதவீதமான தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

எப்போதெல்லாம் கைகளை கழுவவேண்டும்: குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிய பிறகும், சாப்பிட்ட பிறகும், கழிப்பறைகளைப் பயன் படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டு பெரியவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த கற்றுத்தரும் போதும் மறக்காமல் இதைக் கற்று தர வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிய பிறகு தான் சமைக்க வேண்டும். சமைக்கும் போது மட்டுமல்ல உணவு பொருள்களைப் பயன்படுத்தும் போதும் காய்களை நறுக்கும் போதும் என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கழிப்பறைப் பயன்பாட்டுக்குப் பிறகு சிறுநீர், மலம் கழித்த பிறகு உரிய முறையில் கைகளைக் கழுவாமல் இருப்பது அதிக ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடும். ஏனெனில் மலம் கழித்த பிறகு வெறும் நீரால் கைகளை கழுவும் போது, மலத்தின் வழியாக கைகளில் கிருமிகள் பரவ அதிக வாய்ப்ப்புண்டு.

வெளியிலிருந்து வரும் போது சோப்பு போட்டு தேய்த்து ஓடும் நீரில் கண்டிப்பாக கைகளை 30 விநாடிகள் தொடர்ந்து கழுவ வேண்டும். அதுவரை கைகளை முகத்தில் தடவுவதோ வாயருகில் கொண்டு செல்வதோ, கண்களை துடைப்பதோ கண்டிப்பாக செய்யகூடாது. இதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும்.

Kokila

Next Post

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை!… விண்ணின் மைந்தன் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று!

Sun Oct 15 , 2023
ஏவுகணை நாயகன், விண்ணின் மைந்தனர், முன்னாள் குடியரசு தலைவர் என பல பெருமைகளை கொண்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த 22-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் – ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம் ஒரு இந்திய விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர் […]

You May Like