அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது. அந்தப் பயணிகள் விமானம் பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 5342 DC என்ற அவ்விமானம் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா நகரிலிருந்து புறப்பட்டது
அவ்விமானத்தில் 60 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம் போடோமாக் நதி பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பொட்டோமக் ஆற்றில் தேடல், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் பல்வேறு அமைப்புகள் கைகோத்துள்ளதாகவும் காவல்துறை கூறியது.
போடோமாக் ஆற்றில் இருந்து இதுவரை 18 உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 800-679-8215 என்ற கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் கூடுதல் தொலைபேசி எண்களுக்கு news.aa.com ஐப் பார்வையிடலாம். கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது யுஎஸ் விர்ஜின் தீவுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் 800-679-8215 ஐ நேரடியாக அழைக்கலாம்.
விமானம் 5342 இல் உங்கள் உறவினர்கள் பயணம் செய்தால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கட்டணமில்லா 800-679-8215 என்ற எண்ணில் அழைக்கவும் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹெலிஹாப்டரின் பயணம் செய்தவர்கள் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Read more : டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு நல்லதா? யாரெல்லாம் சாப்பிட கூடாது..!! – மருத்துவர்கள் விளக்கம்