fbpx

இறுதிவரை போராடிய வாசிங்டன் சுந்தர்..!! 21 ரன்கள் வித்தியாசத்தில் பறிபோன வெற்றி..!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஃபின் ஆலன், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 35 ரன்களுக்கு வெளியேறினார். டெவான் கான்வே 7 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி அரை சதமடித்து 52 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சாப்னை அபாரமான கேட்ச் மூலம் டக் அவுட்டாக்கி வெளியேற்றி மீண்டும் இந்திய அணியை போட்டிக்குள் எடுத்து வந்தார் வாசிங்டன் சுந்தர்.

பின்னர் களமிறங்கிய டாரில் மிட்சல், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்சர், பவுண்டரி என விளாசினார். 20ஆவது ஓவரில் அர்ஸ்தீப் சிங்கை எதிர்கொண்ட மிட்சல் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட, கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார் அர்ஸ்தீப் சிங். 20 ஓவர் முடிவில் 176 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள், நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இஷான் கிஷன், கில், திருப்பாத்தி என அடுத்தடுத்து வெளியேற 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. பின்னர் கைக்கோர்த்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

சூர்யகுமார் தொடர்ந்து ரன்களை சேர்த்துகொண்டிருக்க ஹர்திக் பாண்டியா தட்டிக் கொடுத்து ஸ்டிரைக் ரொட்டேட் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 47 ரன்கள் சேர்த்திருந்த சூர்யா இஸ் சோதி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இறுதிவரை போராடினார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 50 ரன்கள் குவித்த வாசிங்டன் கடைசி ஓவரில் அவுட்டாகி வெளியேற, நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Chella

Next Post

’இனி கவலையே வேண்டாம்’..!! அரசின் அசத்தல் திட்டங்கள்..!! குறைந்த வட்டியில் கடனுதவி..!! எப்படி பெறுவது..?

Sat Jan 28 , 2023
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக் கடன், கைவினை கலைஞர்களுக்குக் கடன் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டாம்கோ கடனுதவித் திட்டம்: டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவித் திட்டங்கள் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், […]

You May Like