fbpx

குரங்குக்கு போதைப் பொருளை கொடுத்து சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய பயங்கரம்…..!

கல்கத்தாவில் இருக்கின்ற ஒரு இரவு விடுதியில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒன்றை வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கையில் பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது ஆனாலும் அந்த விடுதி நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்து இருக்கிறது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த குரங்கின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி உட்பட பலரும் அந்த விடுதியின் நிர்வாகம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பெயர்களாக பரவிய வீடியோக்களில் ஒரு பெண் சங்கிலியால் கட்டப்பட்டு அரை மயக்க நிலையில் இருக்கும் குரங்கை அரவணைக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. மற்றொரு காணொளியில் கூண்டில் அடைக்கப்பட்டு ஒடுங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் குரங்கின் வீடியோவும் இருந்தது.

இதுகுறித்து தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருவதன் காரணமாக, அந்த விடுதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டாக் செய்யும் வசதி தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு இது குறித்து விடுதலையின் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் அந்த குரங்குகளுக்கும், தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவும் குரங்குகளுடன் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க இயலாது என்று தான் தெரிவித்தோம் என்றும் கூறியுள்ளது.

அதனை ஏற்றுக் கொண்ட அந்த நபர்கள் விடுதியின் தரைத்தளத்தில் இருக்கின்ற நுழைவாயில் பகுதிக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டனர் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதோடு அந்த குரங்குகளுக்கு காயமோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் அந்த விடுதியின் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் போல விலங்குகள் மீது நாங்களும் அக்கரை வைத்திருக்கிறோம். நாங்கள் இது போன்ற செயல்களை செய்ய மாட்டோம் யாருடைய உணர்வுகளையும் நாங்கள் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த விடுதியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

Next Post

சென்னையில் இன்று தொடங்கும் ஜி20 நிதி செயற்குழு கூட்டம்...!

Mon Jun 19 , 2023
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் இன்று முதல் 21, 2023 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முதல் இரண்டு கூட்டங்கள் முறையே கவுகாத்தி மற்றும் உதய்பூரில் நடைபெற்றன. 3வது சந்திப்பின் போது, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம், 2023 பணித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழங்கல்களுக்கான பரிந்துரைகளை இறுதிசெய்வதற்கான விவாதங்களை வழிநடத்துவதில் கவனம் […]

You May Like