பாஸ்போர்டில் தண்ணிர் சிந்துவதால் அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களும் பாதிப்புக்குள்ளாகிறது. இப்போது வரக்கூடிய நவீன பாஸ்போர்டுகளில் பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறோம். அப்படியிருக்கையில், இதில் தண்ணீர் சிந்தினால் பயோமெட்ரிக் தகவல்கள், RFID சிப் அல்லது பிற எலக்ட்ரானிக் அம்சங்கள் எளிதாக பாதிப்புக்குள்ளாகும். இதன் காரணமாக ஏர்போர்ட் அதிகாரிகள் உங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதோடு உங்கள் பாஸ்போர்டில் சேமிக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் தரவுகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு சிரமங்கள் உண்டாகும்.
ஒருவேளை உங்கள் பாஸ்போர்டில் தண்ணீர் சிந்தினால், அதை உடனடியாக சரி செய்யுங்கள். கொஞ்சமாக தண்ணீர் சிந்தியிருந்தால் பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது. நனைந்த பக்கங்களை மட்டும் காய வைத்தால் போதும். அதற்காக மைக்ரோ ஓவன் அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்தி நனைந்த பாஸ்போர்டை காய வைக்காதீர்கள். இது பிரச்சனையை அதிகப்படுத்திவிடும். பாஸ்போர்ட் முழுதும் நனைந்துவிட்டால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி மாற்று பாஸ்போர்டை பெற்றுக் கொள்ளலாம். பல நாடுகள் சேதமான பாஸ்போர்டுகள் மீது கடுமையான விதிமுறைகள் வைத்துள்ளது. நாட்டிற்குள் நுழைய உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் அல்லது சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடலாம்.
பாஸ்போர்ட்டில் தண்ணீர் சிந்துவது சாதாரண பிரச்சனை அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாஸ்போர்ட் எந்த சேதமும் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுங்கள். அதேப்போல் ஒருபோதும் தண்ணீருக்கு அருகில் பாஸ்போர்டை கொண்டு செல்லாதீர்கள். இல்லையென்றால் பயணங்களின் போது தேவையற்ற பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும்.