fbpx

சென்னையில் நாளை முதல் 26ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வாரியம்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னையில் நாளை முதல் 26ஆம் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெம்மேலியில் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளது. இங்கு, தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அவசர தேவைகள் ஏற்பட்டால், லாரிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழக்கம்போல் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மக்களே..!! இனி சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடு..!! உங்களுக்கும் மெசேஜ் வந்துச்சா..!! உடனே செக் பண்ணுங்க..!!

English Summary

The Chennai Water Supply Board has announced that there will be a water supply interruption in Chennai from tomorrow until the 26th.

Chella

Next Post

ஹமாஸ் இதைசெய்யாவிட்டால் காசா கைப்பற்றப்படும்!. டிரம்பை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த மற்றொரு நாடு!

Thu Mar 20 , 2025
If Hamas doesn't do this, Gaza will be captured! Another country that has repeatedly warned Trump!

You May Like