fbpx

வயநாடு நிலச்சரிவு..!! ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவுக்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.

அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தான், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும் பலரும், கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Read More : ஒருநாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கிறீங்க..? கல்லீரலுக்கு ஆபத்தா..? உண்மை இதுதான்..!!

English Summary

Actor Surya, actor Karthi and actress Jyothika have donated Rs 50 lakh to the Kerala Chief Minister’s Relief Fund for Kerala landslide relief work.

Chella

Next Post

அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவ தலைவர் படுகொலை செய்யப்பட்டார்..!!

Thu Aug 1 , 2024
Mohammed Deif Killed: Israel October 7 Attack Mastermind and Hamas Military Chief Eliminated, Says IDF

You May Like