fbpx

’நாங்கள் திராவிடத்தையே ஒழிக்கிறோம்’..!! ’நவ.1ஆம் தேதி சென்னையில் மாநாடு’..!! அர்ஜுன் சம்பத் அறிவிப்பு..!!

நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இரு நாட்களுக்கு முன்பு திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த சோனியா, பிரியங்காவிடம் காவிரி பிரச்சனை குறித்து கூறியிருக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு நேரடியாக அழுத்தம் அளித்திருந்தால் காவிரி நீரை நிச்சயம் பெற்றிருக்க முடியும்.

நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார். அவருடைய தாய் துர்கா ஸ்டாலினோ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார்.

எடப்படி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் பயங்கரவாதி இமாம் அலியை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது யார்? ஜெயலலிதா தலைமையிலான அரசுதானே! அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் நிர்வகித்த அதிமுக இப்போது முஸ்லீம்களை தாஜா செய்கிறது. வரும் 29ஆம் தேதி சென்னிமலையில் ஜெபக் கூடம் அமைக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

சாமி இல்லை என சொல்லும் திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையின் மூலம் வெளிப்படுகிறது. திமுகவையும் அதிமுகவையும் வேண்டாம் என நினைப்பவர்கள் லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகிறார்கள். இந்த அரசியல் மாற்றத்திற்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். திமுக , காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’லியோ’ படத்திற்கு அடுத்து வந்த சிக்கல்..!! இதற்கும் தடை விதித்த கோர்ட்..!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

Tue Oct 17 , 2023
லியோ படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி மறுத்த நிலையில், உள்துறை […]

You May Like