fbpx

வெள்ளரிக்காய் கொடுக்கிறோம்!… வெள்ளை அறிக்கை தரமுடியாது!… அண்ணாமலையை சீண்டிய ஆர்.எஸ்.பாரதி!

அண்ணாமலை, வெள்ளை அறிக்கை கேட்கிறார். வேண்டுமானால் வெள்ளரிக்காய் கொடுக்கிறோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்பாமல் புறக்கணிப்பதைக் கண்டித்து நெல்லை டவுண் ஈசானமுக்கில் தி.மு.க.சார்பில் மத்திய அரசின் நிதி பங்கீடு குறித்து பொதுமக்களுக்கு விவரிக்கும் வகையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறும் பொழுது, “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது. ஆனால் ஐந்து ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மோடி எய்ம்ஸ் கல்லூரிக்காக நட்டிய ஒற்றைச் செங்கலை வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து திமுக அரசு, ஆட்சிக்கு வந்துவிட்டது.

மோடி அரசிற்கு கொஞ்சமாவது உணர்வு இருந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் என்ற சொரணை ஏற்பட்டு கொஞ்சமாவது நிதி வழங்கி எய்ம்ஸ் கல்லூரியை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் மோடி அரசின் ஆயுட்காலமே முடியப்போகிறது. இதுவரையிலும் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு நிதி ஒதுக்கவில்லை.

தமிழகத்தில் செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. எய்ம்ஸ் தருகிறோம் என்று சொல்லி அல்வா கொடுத்து விட்டார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கும் மத்திய அரசு அல்வா கொடுத்து விட்டது. மத்திய அரசு கொடுத்த அல்வாவிற்கு பதில் சொல்லும் விதமாக அல்வாவிற்கு பெயர் பெற்ற திருநெல்வேலியில் இருந்து மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் அல்வா கொடுக்கப் போகிறார்கள். அண்ணாமலைக்கே வெள்ளரிக்காய் வேண்டுமானால் வாங்கி கொடுக்கலாம். வெள்ளை அறிக்கை எல்லாம் கொடுக்க முடியாது. திருநெல்வேலியில் அதிகம் வெள்ளரிக்காய் கிடைக்கிறது. வரும்பொழுது நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்

Kokila

Next Post

புகை பிடிப்பவரை விட அருகில் இருப்பவர்களுக்கு தான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Sat Feb 10 , 2024
பொதுவாக புகைபிடிக்கும் பழக்கம் உயிருக்கு கேடு என்ற வாசகத்தை பல இடங்களில் படித்திருப்போம். இதே போல் புகைபிடிக்கும் பழக்கம் நம்மை மட்டும் அல்லாது நம் சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து புகைப்பிடிக்கும் போது நமக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்திற்கும் ஆபத்தை விளைவித்து உயிருக்கு உலை வைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒருவர் புகைபிடிக்கும் போது அவரின் அருகில் குடும்பத்தார்களோ அல்லது மற்றவர்களோ இருக்கும்போது அவர்கள் இரண்டாம் […]

You May Like