fbpx

”இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல”..!! விலகியது காங்கிரஸ்..!! ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக..!! வேட்பாளர் இன்று அறிவிப்பு..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அவருடைய தந்தையும், காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவரும் உடல்நலக்குறைவால், கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறையும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இம்முறை திமுகவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லாம் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். மேலும், திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது.

அதன்படி, ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாரா இல்லை அந்த தொகுதியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வி.சி.சந்திரகுமார் 2011இல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவானார். பின்னர், அவர் தேமுதிகவில் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கிய நிலையில், பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வருகிறார். அதேபோல், மாவட்ட துணைச் செயலாளராக உள்ள செந்தில் குமார், இளைஞரணி கிளை செயலாளர், மாணவரணி அமைப்பாளர், மாவட்ட பொருளாளர் பதவிகளை வகித்தவர்.

Read More : ருசியாக சாப்பிட்டு உடல் எடையை டக்குன்னு குறைக்கலாம்..!! ஈசியா வீட்லயே செஞ்சி சாப்பிடுங்க..!!

English Summary

It is said that the DMK candidate for the Erode East constituency by-election is likely to be announced today.

Chella

Next Post

”மத்திய அரசு இதை மட்டும் செய்துவிட்டால் தங்கம் விலை மேலும் உயரும்”..!! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை..!!

Sat Jan 11 , 2025
Economist Anand Srinivasan has explained the reason for the rise in gold prices.

You May Like