fbpx

”FIR வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல”..!! மாணவி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பெண் வழக்கறிஞரான வரலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதான போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட உறையில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான எஃப்.ஐ.ஆர். தானாகவே லாக் ஆகி விடும். ஆனால், சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர், ஓ.டி.பி.யை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை பார்த்துள்ளனர். அந்த 14 பேரின் விவரங்கள் உள்ளன. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை பொறுப்பல்ல. தேசிய தகவல் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்கு காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பாபா வாங்காவின் புதிய ஆபத்தான கணிப்புகள்..!! 2025இல் என்ன நடக்கும்..? அழிவு ஆரம்பம்..!!

English Summary

The investigation report regarding the student sexual assault case was filed in the High Court.

Chella

Next Post

சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..? அதை எப்படி தடுப்பது..?

Sat Dec 28 , 2024
Let's now look at the causes of kidney stone problems.

You May Like